யாழ்-பருத்தித்துறை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது!

யாழ்-பருத்தித்துறை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது!

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இரண்டு பேரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ்-பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குறித்த மீனவர்கள்,காரைக்காலில் இருந்து 24 கடல் மைல் தூரத்தில் மீன்பிடியில் ஈடுப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரித்த போது,

எஞ்சின் கோளாரு காரணமாக இந்திய எல்லைக்குள் வந்து விட்டோம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து இந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.