மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது!

மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது!

மன்னார் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் இணைந்து கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து வங்காளி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், வங்காளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோதே அவர்களிடமிருந்து 2.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 30 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.