மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும்!

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும்!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்கூற வேண்டும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, உண்மையை ஊக்­கு­வித்­தல், நீதி, இழப்­பீடு மற்றும் மீள நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­தல் தொடர்­பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பியோனாலா நி ஆலோன் குறிப்பிட்டார்.

மேலும் இதன்போது, நியாயமான விசாரணை, சித்திரவதை குற்றச்சாட்டுகள், மனிதநேயமற்ற மற்றும் இழிவுபடுத்தும் செயற்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக மீறல்களுக்கான பொறுப்புக் கூறல், சிறுபான்மையின சமூகத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் விலக்குதல் போன்றன குறித்து சுட்டிக்காட்டினார்.

அத்தோடு பயங்கரவாத சட்டத்தை தடுப்பதும் அதனை மறுபரிசீலனை செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு மற்றும் புதிய சட்டத்தை கொண்டுவரும் முயற்சிகளை அவர் வரவேற்றார்.

மேலும் இலங்கை அரசாங்கத்துடன் தனது அலுவலகத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், இலங்கையின் முயற்சிகளுக்கு தனது தொழில்நுட்ப உதவியும் வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.