மரணத்தின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது!

மரணத்தின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது!

மரணத்தின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை எமது கட்சி தீவிரமாக நம்புகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஊடகவிஅய்லர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர் “மரண தண்டனை விதிப்பதன் ஊடாக குற்றங்களை கட்டுப்பாடுத்த முடியாது. மரணங்களின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை நாம் தீவிரமாக நம்புகிறோம்” என தெரிவித்தார்.