9 மணி நேரம் போராடி எலியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

9 மணி நேரம் போராடி எலியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

நிலக்கீழ் சாக்கடை மூடியில் சிக்கிய எலி ஒன்றைப் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர் யேர்மனி நாட்டுத் தீயணைப்புப் படையினர்.

யேர்மனி பிரான்போர்ட்ட நகரிலிருந்து 35 மைல் தொலைவில் அமைந்துள்ள பென்சியம் நகரில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாக்கடை மூடியில் சிக்கிய எலி உயிருக்குப் போராடிக்கொண்ருந்த போது அதனைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் அதனைக் காப்பாற்றப் பார்த்த போது அது பலனிளக்கவில்லை.

பின்னர் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு 9 மணி நேரம் போராடி எலியை உயிருடன் மீட்டுள்ளனர்.