இலங்கை தலைவர்களுடன் இந்திய தூதுவர் சிறப்பு சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் அவர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை சம்பந்தமாக விளக்கமளிப்பதற்காகவே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக இந்திய தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ எந்தவித பிரச்சினைகளும் இந்தியாவுக்கு இல்லை என குறித்த கலந்துரையாடலில் தரஞ்சித் சிங் கூறியுள்ளார்.