அமெரிக்காவின் ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியது!

எப் 16 ரக விமானங்களை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா அமெரிக்காவிடம் முறைபாடொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பதில்தாக்குதலில் பாகிஸ்தானின் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.

இதனை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில் விமானத்தின் வரிசை எண் மற்றும் குறியீட்டு எண் என்பவற்றை கொண்டு இந்தியா இதனை உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், குறித்த விமானங்களை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற நாடுகள் மீதான தாக்குதலில் பயன்படுத்த கூடாது என்ற அமெரிக்காவின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து இந்திய விமானப்படை அதிகாரி கபூர் கருத்து தெரிவிக்கையில், AMRAAM ஏவுகணையின் பாகங்கள் கிடைத்துள்ளன.

இந்த விமானத்தினை இரவு ,பகல் என எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியும். இதேவேளை கண்ணுக்கு தெரியாத தூரம் வரையில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமை கொண்டது என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.