பொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ்

தமிழில் முண்ணனி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஸ் பொலிவுட் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கீர்த்தி சுரேஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “நடிகை திலகம்“ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சர்கார், சண்டைக்கோழி 2 , சாமி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இத்திரைப்படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது அவர் பொலிவுட் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் இத்திரைப்படத்தை போனிக் கபூர் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இத்தகவலை நடிகை கீர்த்தி சுரேஸ் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.