அங்கப்பிரதிட்டை போராட்டம் தொடர்கிறது!

அங்கப்பிரதிட்டை போராட்டம் தொடர்கிறது!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரியும் இனநல்லிணக்கத்தையும் கோரி சமூக செயற்பாட்டாளர் ஒருவரால் தன் மேனி வருத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் அங்கப்பிரதிட்டை போராட்டம் செட்டிகுளத்தையும் கடந்து தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போராட்டத்தை மன்னாரில் இருந்து தொடக்கிய இச்செயற்பாட்டாளர் மிகவும் கடினமான இந்த நீண்ட தூர அங்கப்பிரதிட்டையை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மக்களின் ஆதரவை தொடர்ந்தும் வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.