வெடுக்குநாரிமலை ஆலய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.

வெடுக்குநாரிமலை ஆலய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.

வவுனியா – வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி மலைக்கு குழுவொன்று இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லிங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த விஜயத்தின் போது வெடுக்குநாரிமலை பகுதியில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை தொன்மைவாய்ந்த வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைப்பதுடன், அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் என கடந்த மாதம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.