முழு நாடும் கோத்தபாயவை நம்புகிறது!

முழு நாடும் கோத்தபாயவை நம்புகிறது!

முழு நாடும் தற்போது கோத்தபாய ராஜபக்ச வேண்டும் என கோருவதாகவும், யார் நம்பவில்லை என்றாலும் நாட்டு மக்கள் கோத்தபாய ராஜபக்சவை நம்புவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கைக்கு எதிராக எவராவது செயற்பட எண்ணினால், அது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை தோற்கடிக்க செய்யும் காட்டிக்கொடுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு எதிராக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை முறையை ஒழிக்க கொண்டு வந்துள்ள யோசனையை ஆதரிக்க எவராவது தயாரானால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் இருந்து விலக தயாராக இருக்கின்றோம்.

20ஆவது திருத்தச் சட்டத்தை தற்போதைய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. எம் அணியை சேர்ந்த எவராது அதற்கு ஆதரளித்தால், இந்த அணிக்கும் வணக்கம் சொல்ல நேரிடும்.

ரணிலுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஜனாதிபதி ஆட்சியை முறை பெரிய பிரச்சினை. மகிந்த ராஜபக்ச தலைமையிலான எமது அணிக்கு அப்படி எந்த பிரச்சினையும் இல்லை.

முன்னர் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்யும். தற்போது மக்கள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டனர். முழு நாடும் கோத்தபாய ராஜபக்சவையே கோருகிறது.

கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும் என மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டால், முடிவு கஷ்டமானது.

தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட்டு தனித்து போட்டியட தயார் எனவும் எனினும் அதனை அணிக்குள் இருக்கும் எதிரிக்கு தேவையான நேரத்தில் செய்ய தயாரில்லை எனவும் முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்கப்படும் எனவும் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.