அனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்!

அனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்!

அனைத்து சமூகங்களுக்கிடையில் நட்புறவுமிக்க அன்புகலந்த உறவுகள் வலுவடைந்து சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட வாழ்த்து செய்தியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பக்கூடிய சமூகம் இருப்பதாக கூறிய அவர், ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதன் மூலம் ஒற்றுமையை கட்டியெழுப்பி சமய நம்பிக்கையினுள் உள்ள சுதந்திரத்தை கொண்டு பாரிய பணியொன்றை நிறைவேற்ற முடியும் என அவர் கூறினார்.

அத்தோடு இந்து சமயத்தில் உள்ள சமய அனுஷ்டானங்களும் விழாக்களும் மக்களிடையேயான பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்த காரணமாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.