பூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி! மூவர் கவலைக்கிடம்.

பூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி! மூவர் கவலைக்கிடம்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு, எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாரிலிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்திருந்தனர்.

இதன்போது பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு மேலும் 3 இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.