இணையத்தில் வைரலாகும் ‘ஐஸ் அரசி’

இணையத்தில் வைரலாகும் ‘ஐஸ் அரசி’

விடுமுறைக்காக ஐஸ்லாந்திற்கு சென்ற 77 வயதான பாட்டியின் சாகசம் குறித்த ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஜூடித் ஸ்ட்ரெங் என்ற அவர் தமது மகனுடன் ஐஸ்லாந்தின் டைமண்ட் கடற்கரைக்குச் சென்றிருந்தார்.

கரைக்கு வந்து சேர்ந்த பனிப்பாறையின் மீது அமர்ந்த ஜூடித்தை அவரது மகன் ஒளிப்படம் எடுத்தார்.

அரியணையில் வீற்றிருக்கும் அரசியைப் போல் ஜூடித் கம்பீரமாக உட்கார்ந்திருந்தபோது பெரிய அலை ஒன்று பனிப்பாறை மீது மோதியது.

இதன்காரணமாக பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியது. அப்போது பனிப்பாறையிலிருந்து தான் நழுவி விழுவதை அவர் உணர்ந்தார்.

எனினும், அருகில் இருந்த கரையோரக் காவல்படை அதிகாரி அவரைக் காப்பாற்றிப் பாதுகாப்பாக மீட்டிருந்தார்.

ஜூடித் கடலில் மிதந்தபோது அவரது மகன் எடுத்த ஒளிப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.