இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர் காலமானார்!

இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர் காலமானார்!

இயற்பியலுக்கான நோபல் பரிசினை கடந்த 2000ஆம் ஆண்டு வென்ற ஸொரெஸ் எல்ஃபெரொவ் (Zhores Alferov) காலமானார்.

தனது 88 வயதில் அவர் நேற்று முன்தினம்(சனிக்கிழமை) காலமானதாக ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

1970களில் கணினிகள், ஒலிவட்டுச் சாதனங்கள், கைத்தொலைபேசிகள் ஆகியவற்றுக்கு வழிவகுத்த தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக எல்ஃபெரொவுக்கும் இரு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசுடன் 1 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசை முன்னைய சோவியத் தலைவர் மிக்காய்ல் கோர்பச்சாவ் (Mikhail Gorbachev) 1990இல் வென்றார்.

அதற்கு பின்னர் நோபல் பரிசினை வென்ற முதல் ரஷ்யர் எல்ஃபெரொவ் என்பது குறிப்பிடத்தக்கது.