800 ஆண்டுப் பழமையான மம்மியின் தலை திருடப்பட்டுள்ளதாக தகவல்!

800 ஆண்டுப் பழமையான மம்மியின் தலை திருடப்பட்டுள்ளதாக தகவல்!

அயர்லாந்தின் டப்ளின் தேவாலயத்திலிருந்த ஒரு மம்மியின் தலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 800 ஆண்டுகள் பழமையான மம்மியின் தலையே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த மம்மி வைக்கப்பட்டிருந்த சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, St. Michan தேவாலயத்தின் மற்றொரு மம்மியும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

300 ஆண்டுகள் பழமையான கன்னியாஸ்திரி ஒருவரின் மம்மியே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.