வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்!

வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்!

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூலம் வானங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டம் மூலம் வாகன இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய வாகன இறக்குமதிக்காக இதுவரை விதிக்கப்படாத 15 வீத வற் வரியை விதிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் சுங்க வரியை 5 வீதத்தில் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வாகனம் உட்பட அனைத்து இறக்குமதி பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிக்கும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.