கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு!

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்பட்டமை தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் தேடுதல் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் பகுதியில் இவ்வாறு மோட்டார் செல் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள வெடி பொருட்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் நீதிமன்ற அனுமதியை நாடியுள்ளனர்.

அதனை தொடர்ந்து அங்கு வேறு வெடிபொருட்களும் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தேடுதல் மேற்கொள்வதற்கு மன்று அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதனடிப்படையில் தேடுதல் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.