51 நாள் பிரதமர் பதவியால் நானும் பாதிப்படைந்தேன்!

51 நாள் பிரதமர் பதவியால் நானும் பாதிப்படைந்தேன்!

ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் 51 நாட்கள் இந்நாட்டின் பிரதமராக இருந்து அரசாங்கத்தை கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில் தனக்கு அசாதாரன சூழ்நிலை ஏற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அசாதாரண சூழ்நிலையை எப்போது ஏற்படுத்தினாலும் அதற்காக ஒருபோதும் கவலைப்படபோவதில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இந்நாட்டை செழிப்படைய செய்வதற்கும் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் அமைப்பதற்கும் தொடர்ச்சியாக போராடுவேன் என மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் வெள்ளிக்கிழமை, முதலாவதாக அரசியல் மேடையில் ஏறப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கண்டியில் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பாரிய பொதுக்கூட்டத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ, தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்க போவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி மஹிந்த தலைமையில் பாரிய கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.