தேசிய உடை அணியக்கூடிய ஒருவரே அடுத்த ஜனாதிபதி!

தேசிய உடை அணியக்கூடிய ஒருவரே அடுத்த ஜனாதிபதி!

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலொன்று நாட்டில் நடத்தப்படுமாயின் அதில் தேசிய உடை அணியக்கூடிய ஒருவரே நிச்சயம் தெரிவு செய்யப்படுவாரென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்தர பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குமார வெல்கம இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடுவதே தற்போதைய சூழ்நிலையில் சிறந்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுவதாகவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில் தேர்தலை நடத்தினால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.