சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலைப்புலிகளும் இராணுவமும் ஒன்றா?

விடுதலைப்புலிகள் அமைப்புடன் இராணுவத்தினரை சமனாக மதிப்பிடுவதை ஆளும் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இராணுவத்தினரை குற்றவாளியாக கருதும் மேற்குலக நாடுகளின் அபிப்பிரயாயங்களுக்கு மனித மனித உரிமை பேரவை இணக்கம் தெரிவித்து அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது ஒருதலைபட்சமான செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு பயங்கரவாத சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பினர் போர் குற்றங்களை புரியவில்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.