வெளியேற வேண்டிவரும்? விமல் எச்சரிக்கை!

வெளியேற வேண்டிவரும்? விமல் எச்சரிக்கை!

கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை தடுப்பதற்காக, நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டால், மகிந்த அணியில் இருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்று, விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை கூட்டு எதிரணியின் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும், விமல் வீரவன்ச, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையிலேயே, கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை தடுப்பதற்காக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டால், மகிந்த அணியில் இருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்று, விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.