ஐ.தே.க வரவு- செலவு திட்டம் மக்களை ஏமாற்றும் செயற்பாடு!

ஐ.தே.க வரவு- செலவு திட்டம் மக்களை ஏமாற்றும் செயற்பாடு!

2019ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள வரவு- செலவு திட்டம் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதாக கூறி அவர்களை ஏமாற்றுவதாகவே இருக்குமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாணத்துறையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரவு- செலவு திட்டம் எதிர்வரும் தேர்தலை நோக்காக கொண்டு அமைக்கப்பட்டிருக்குமென மஹிந்த ராஜபக்ஷ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் இவ்வரவு- செலவு திட்டத்தில் மக்கள் நலன்களை பெற்றுக்கொள்வார்களென்பது வெறும் நம்பிக்கையே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 8ஆம் திகதி, கண்டியில் பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் நிறுவநரான பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ, அரசியல் அரங்கில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.