யாழ்.வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் “

யாழ்.வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் ”

யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் ” என கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில்.ஆவா குழு எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு வாள் வெட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.