யாழில் விபத்து : இருவர் வைத்தியசாலையில்!

யாழில் விபத்து : இருவர் வைத்தியசாலையில்!

போக்குவரத்து பொலிஸாரின் கவனயீனத்தால், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும், டிப்பர் வாகனத்துடன் மோதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொடிகாமம் மிருசுவில் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

மிருசுவில் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தை மறுபக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்த வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்துள்ளனர்.

இதனால் டிப்பர் சாரதி சடுதியாக நிறுத்தியதால் பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும், தாயும் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற பகுதி வளைவான வீதிப்பகுதி, அத்துடன் டிப்பர் பயணித்த பகுதியின் மறுபக்கத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாறே வீதிப் போக்குவரத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.

ஆனால் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிளை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறிய வீதிப்போக்குவரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.