அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 2 ஆயிரத்து 500 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கென 40 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓய்வூதிய முரண்பாடுகளை சரிசெய்வதற்கு 12 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆயுத படையினருக்கான சலுகை கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி, கட்டளை தளபதிகளுக்கான கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.