ரணிலை சந்தித்தார் மேரியன் ஹேகன்!

ரணிலை சந்தித்தார் மேரியன் ஹேகன்!

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மேரியன் ஹேகன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நோர்வேயின் பங்களிப்பு தொடர்பில் மேரியன் ஹேகன் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மேரியன் ஹேகன் தனது விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர, உள்ளிட்டோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக மற்றும் வணிகப் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளதுடன், வடக்கிற்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது.