2019ஐ இராணுவ ஆண்டாக பிரகடனப்படுத்த நடவடிக்கை.

2019ஐ இராணுவ ஆண்டாக பிரகடனப்படுத்த நடவடிக்கை.

2019ஆம் ஆண்டை இராணுவ ஆண்டாக பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதல் கட்டமாக, இராணுவ கொடி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கொடியை ரணவிறு சேவா அதிகார சபையின் தலைவரான, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அணிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே, இந்த ஆண்டை இராணுவ ஆண்டாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.