லண்டன் விமான நிலையத்தில் குண்டுகள் மீட்பு!

லண்டன் விமான நிலையத்தில் குண்டுகள் மீட்பு! விசாரணைகள் தீவிரம்!

லண்டனின் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையமொன்றில் மூன்று சிறிய குண்டுகள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

லண்டன் சிற்றி விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் வோட்டர்லூ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இப்பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்தாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இப்பொதிகள் மூன்றும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும்,  இப்பொதிகள் மூன்றும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதாகவும் இப்பொதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளினால் எவரும் பாதிக்கப்படவில்லையெனவும் சேவைகள் எதுவும் இடையூறுகளுக்கு உள்ளாகவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.