கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.

கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

பொரளை திலகரட்னராமய விஹாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் மதுரட்ட தம்மாலாங்கார தேரர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து இவ்வாறு சஜித் பிரேமதாஸவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலையை தோற்றுவிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவை தேவையற்ற வகையில் புகழ்ந்து பாராட்டி அதன் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆத்திரமூட்டி பிளவினை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவத்துள்ளார்.