பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்துவிட்டு ஓடிய வாலிபர்..

பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்துவிட்டு ஓடிய வாலிபர்.. எரியும் தீயோடு வாலிபரை கட்டிப்பிடித்த பெண்!

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் இளைஞர் ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த இளம்பெண்ணுக்கு தீ வைத்துள்ளார்.

அச்சமயத்தில் எரியும் தீயோடு ஆவேசத்தில் வந்த பெண் வாலிபரை கட்டிபிடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, இளைஞர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு, குறித்த பெண்ணை உயிரோடு தீ வைத்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த அந்த பெண், எரியும் தீயோடு வாலிபரை கட்டிபிடித்தார். வாலிபரின் உடலிலும் தீ பிடிக்க இருவரும் உயிருக்குப் போராடினர்.

இதற்கிடையில், வீட்டினுள் இருந்து புகையும், அலறல் சத்தமும் வந்ததைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் மீட்டனர்.

ஆனால், இந்த சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் உயிரிழந்தார். உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.