ஆசிய கிண்ண றோல் போல் போட்டியில் உருத்திரபுர மாணவிகள் சாதனை.

ஆசிய கிண்ண றோல் போல் போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுர மாணவிகள் சாதனை.

கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசிய கிண்ணபோட்டியில் விளையாடி கிளிநொச்சிக்கு மட்டுமல்ல இலங்கைக்கே பெருமையை தேடித்தந்திருக்கிறார்கள்.

இலங்கை அணி மூன்றாம் இடத்தையும் நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர்.

இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளை அவர்களையும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுகளை தெரிவித்தார்.