செட்டிக்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

செட்டிக்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதான பாதையில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்டமை மற்றும் நந்திக்கொடியினை காலால் மிதித்து அவமதித்தமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (08.03) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செட்டிக்குளம் விவேகானந்தர் முற்றத்திலிருந்து ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் மனுக் கையளித்தனர்.

பிரதேச சைவக்குருமார்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.