திருகோணமலை சிறைச்சாலையில் மகளீர் தின கொண்டாட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் மகளீர் தின கொண்டாட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் மகளீர் தின கொண்டாட்டம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச மகளீர் தின கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் உலகளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில் இன்று திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் தலைமையில் மகளீர் தின கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

சிறைச்சாலையின் பெண்களின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பெண்களின் மகத்துவம் தொடர்பாக ஹேவா வித்தாரன பத்திரன தெளிவுபடுத்தியுள்ளார்.

இதில் திருகோணமலை சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவர் சி.டி.சிவரெட்ணராஜா, மகளிர் மற்றும் சிறுவர் கள உத்தியோகத்தர்கள், பெண் கைதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.