இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்குவதால் கூட்டமைப்பு சாதிப்பதென்ன?

இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்குவதால் கூட்டமைப்பு சாதிப்பதென்ன?

சர்வதேச கண்காணிப்பு எனக்கூறி ஜெனீவாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதிக்க முனைகிறது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், தமிழர்கள் விடயத்தில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டாலும், அது ஒவ்வொரு காலண்டுக்கும் எதனை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்ட நேர சூசியைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.