அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் இணைத்து புதிய அரசியல் களம்!

அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் இணைத்து புதிய அரசியல் களம் அமைக்கப்படும்!

அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் இணைத்துப் புதிய அரசியல் களம் ஒன்றினை அமைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள சிந்தனைக்கூடத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வுபெற்ற கல்வியாளர்களை ஒன்றிணைத்து மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ‘பணிநிறை பல்கலைக்கழக கல்வியாளர் ஒன்றியம்’ எனும் பெயரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் ஆய்வாளர்களை உள்ளடக்கி இந்த அமைப்பு எதிர்காலத்தில் செயற்பட இருக்கின்றது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஆராயும் முகமாக இன்றைய கலந்துரையாடல் அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் மேற்கூறிய பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த அமைப்பினூடாக செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

எனவே இந்த அமைப்பானது ஒரு நீண்டகாலச் செயற்பாடுகளை உள்ளடக்கிய கல்வியாளர்களைக் கொண்ட நிறுவனமாக செயற்படும்” என வரதராஜப்பெருமாள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.