இலங்கைக்கு கடன் வழங்க சீனா தயாராக இல்லை!

இலங்கைக்கு கடன் வழங்க சீனா தயாராக இல்லை!

இலங்கைக்கு கடன்களை வழங்குவதற்கு முன்புபோல சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு கடன்களை சீனா துரிதமாக வழங்கியது.

தற்போது, சீனா கடன்களை வழங்க தாமதிக்கிறது. மேலதிக நிபந்தனைகளையும் விதிக்கிறது. இதற்குப் பிரதான காரணம், தற்போதைய அரசாங்கம் சீனாவை விமர்சித்தமையே ஆகும்.

இலங்கையின் கடன் சுமைக்கு சீனா காரணம் அல்ல. சீனாவை விட ஜப்பானிடம் இருந்தே அதிக கடன்களை இலங்கை பெற்றிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.