வேகக்கட்டுபாட்டை இழந்து, கடைக்குள்ளே சென்ற வேன்..!

வேகக்கட்டுபாட்டை இழந்து, கடைக்குள்ளே சென்ற வேன்..!

யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று டயர் வெடித்ததில் வேகக்கட்டுபாட்டை இழந்து கடையின் கேட்டினை உடைத்து உள்ளே நுழைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (09.03.2019) பிற்பகல் 3 மணியளவில் நீர்வேலி கந்தசாமி கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது , இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.