முல்லைத்தீவில் வாகன விபத்து ;ஐவர் படுகாயம்.

முல்லைத்தீவில் வாகன விபத்து ;ஐவர் படுகாயம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் மூங்கிலாற்று சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்தனர்.

பரந்தன் புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் ஏறிய முச்சக்கர வண்டியுடன், அதிவேகமாக வந்த உந்துருளி மோதியது.

உந்துருளியில் பயணித்த இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.