சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சி!

சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சி!

சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“சப்ரகமுவ மாகாணத்திலிருந்து நிலத்திற்கு அடியிலிருந்து குழாய் மூலம் நீரைக் கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.