வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் எம்பியால் வீடு கையளிப்பு

வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் எம்பியால் வீடு கையளிப்பு

வவுனியா திருநாமக் குளம் பகுதியில் வசித்துவரும் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் நிலைமை மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் ஜெர்மனி “Meerbusch” நகர நண்பர்களும் அயல் கிராம நண்பர்கள்களோடு இணைந்து வீட்டிற்கான நிதியையும் கட்டுமான நிதியை “VSFEE டென்மார்க்கும் “(வாணி சமூக பொருளாதார சுய மேம்பாட்டு நிறுவனம்) அன்பளிப்பாக வழங்கியமைக்கு அமைவாக,

அவர்களுக்கான வீடு கட்டப்பட்டு இன்று காலை ஒன்பது மணியளவில் அவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது

30 வருடங்களுக்கு முன்பு இனக் கலவரம் காரணமாக மதவு வைத்த குளத்தில் இருந்து இடம் பெயர்ந்து பம்பைமடு மற்றும் செட்டிகுளம் போன்ற இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தவர்களில் இவர்களும் ஒரு குடும்பம்

அவர்களால் நிலையான வாழ்வையோ நிரந்தர வேலையையோ எடுப்பதற்கான கல்வி தரமும் அதைக் கற்பதற்கான சூழலும் இடம் பெயர்வு காரணத்தால் கிடைக்காத காரணத்தாலும் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வந்துள்ளார்கள்

அவர்களுக்கு வெளிநாட்டில் உதவுவதற்கு உறவினர்கள் இல்லை என்பதோடு அவர்கள் குடும்பத்தில் ஒரு நிரந்தர வேலையை எடுப்பதற்கு எந்த கல்வித் தகமையும் யாருக்கும் இல்லாத காரணத்தாலும் உடல் நிலை சரி இல்லாத போதும் மிகவும் கஸ்ரப்பட்டு அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் சிரம்ப்பட்டு வந்தனர்

அவர்களைப் போல் எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகளும் கஸ்ரப்படக்கூடாது என்ற காரணத்தால் செட்டி குளத்தில் இருந்து திருநாவற்குளத்தில் வவுனியாவிற்கு அருகாமையில் உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர்

மழை காலத்தில் அவர்கள் உறவினர் வீடுகளில்தான் தங்கி நிற்பதையும் அவர்கள் கஸ்ரத்தையும் நேரில் கண்டவர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் ஊடாக டென்மார்க்கில் இருந்து உதவி வரும் வாணி சமூக சுய பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தினருக்கு அவர்கள் நிலையை தெரியப்படத்தியமைக்கு அமைவாகவே அவர்களுக்கு இவ் வீடு கட்டப்பட்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.