வலி.வடக்கில் ஆடு திருடிய இருவர் கைது!

வலி.வடக்கு வசாவிளான் குட்டியப்புலம் பகுதியில் மேய்ச்சல் தரவையில் நின்ற பெறுமதி மிக்க ஆடு ஒன்றினை திருடி சென்ற இருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏழாலை பகுதியினைச் சேர்ந்தவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆட்டின் உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர்கள் இருவரும் திருடிய ஆட்டினை முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.