காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்!

காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்!

வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் என கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நான் வரவேற்கின்றேன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு நம்பிக்கையளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

எனினும் இந்த நிதி போதுமானதாக இல்லை. இந்த நிதி அதிகரிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக நிதியமைச்சரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன், காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளார்.