கட்டுநாயக்கவில் சிக்கிய விமான சேவை ஊழியர்.

பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய விமான சேவை ஊழியர்.

கட்டாரில் இருந்து இலங்கைக்கு தங்க வளையல்களை கடத்த முற்பட்ட ஒருவர் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு விமான சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 10 மணியளவில் கட்டாரிலிருந்து வருகை தந்த விமானத்திற்கூடாக இலங்கையை வந்தடைந்த குறித்த சந்தேகநபரிடம், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பயணப் பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க வலையல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய, இரத்தினபுரியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 4043 கிராம் எடையுடைய, 21 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான, 423 தங்க வளையல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.