அரசியலில் பெண்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்!

அரசியலில் பெண்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்!

பெண்களுக்கு அரசியலில் 25% உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் என தெரிவித்துள்ளார்.

அம்பாறை, அக்கறைப்பற்று கலாசார மண்டபத்தில் நேற்று பாதிப்புற்ற பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இன்று நாம் சர்வதேச மகளிர் தினத்தை மிக எழுச்சியாக கொண்டாடிக் கொண்டுள்ளோம். அந்த வகையில் பெண்களின் சமத்துவம் உரிமை என்பவற்றை நாம் மதிக்க வேண்டும். அத்துடன் பெண்களின் மூலமாக பல மாற்றங்களை கொண்டுவர முடியும்.

1800களில் ஏற்பட்ட பெண்ணடிமை ஒடுக்குமுறையின் பேரிலேயே பெண்களுக்கான சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பெண்கள் மூலமாக பல நாடுகளில் அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அந்தவகையில் இலங்கையிலும் அவ்வாறான அரசியல் மாற்றங்கள் இடம்பெற வேண்டும் பெண்கள் அவர்களது உரிமைகளுக்காக பிறப்பிலிருந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக பார்த்தால் பெண்களுக்கு அரசியலில் 25 % உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இவ்வருடம் நடைபெற்ற தேர்தலில் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

பெண்களின் துணிவையும் தைரியத்தையும் நாம் மிக கௌரவமாக பார்க்க வேண்டும். காரணம் பல போராட்டங்கள் மத்தியில் பாடுபட்டு அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

ஆகையினால் இந்த சர்வதேச தினங்களில் பெண்களை மதித்து நடக்க நாம் முன்வர வேண்டும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.