பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற குடும்பத்தினர் விபத்து.

பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற குடும்பத்தினர் விபத்து.

மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண் உட்பட நான்கு பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

மகாகுபுக்பொல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

வவுனியா தாண்டிகுளம் பகுதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த கயஸ்ரக வாகனம், முன்னால் பயணித்து கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

வவுனியாவின் எல்லைப்பகுதியும், அனுராதபுரம் மாவட்டத்தின் மகாகுபுக்பொல பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கயஸ்ரக வாகனத்தில் தாண்டிகுளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்திருந்த நிலையில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்து வவுனியா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சிலிருந்து வந்திருந்த இளைஞரை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப சென்ற வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.