பாதை மூடப்பட்டதால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு! ஓமந்தை மக்கள்.

பாதை மூடப்பட்டதால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு! ஓமந்தை மக்கள்.

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைக்கு திருச்சபை ஒன்றின் நிதி உதவியுடன் அண்மையில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்தப் பாதையூடாக பொதுமக்கள் பயணம் செய்ய முடியாதவாறு தொடருந்துத் திணைக்களத்தால் தண்டவாளங்களால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதைக்கு அப்பால் உள்ள மக்கள் 30 வருடங்களிற்கு மேலாக அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

பிரதான போக்குவரத்து மார்க்கமாக குறித்த வீதி காணப்படுகின்றது. தற்போது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமையால் அதனால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரக்கறிகளை சந்தைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தலைமை அலுவலகத்தின் பணிப்பின் குறித்த பாதை போக்குவரத்து மேற்கொள்ள முடியாதபடி தடைசெய்யப்பட்டுள்ளது என்று திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.