ஜெனீவா செல்லும் ஆளுநரிடம் மகஜர்கள் கையளிப்பு!

ஜெனீவா செல்லும் ஆளுநரிடம் மகஜர்கள் கையளிப்பு!

ஜெனீவா செல்லும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் மக்களால் நேற்று(புதன்கிழமை) மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் சந்திப்பித்தின்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் எழுத்துமூலம் கையளித்தனர்.

கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அமைச்சு செயலகத்தில் மகஜர் கையளிப்புக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வட. கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்தித்து தமது கோரிக்கைகளையும் கையளித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் சார்பில் ஜெனீவா செல்லவுள்ள 3 போ் கொண்ட குழுவில் வடக்கு மாகாண ஆளுநா் சுரேன் ராகவனையும் ஜனாதிபதி இணைத்துள்ளார்.

இந்நிலையில் தாம் ஜெனீவாவில் தமிழ் மக்கள் சார்பில் எதையாவது பேசவேண்டுமானால் அதனை தனக்கு நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ சமா்பிக்கும்படி ஆளுநர் பகிரங்கமான அறிவித்தல் ஒன்றிணை வெளியிட்டிருந்தார். அதற்கமைமைய இந்த மகஜர் கையளிப்புக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.