மகிந்தவிடம் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கை!

மகிந்தவிடம் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கை!

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை தடுக்க வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நாம் எதிரணியில் இருந்துகொண்டும் அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றோம்.

இந்நிலையில், எமது தரப்பின் நியாயங்களையும், ஒத்துழைப்புகளையும் விளங்கிக்கொண்டு அரசாங்கம் உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இதேவேளை, தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.