யாழ் பல்கலைகழகத்தின் எழுச்சி பேரணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும் ஆதரவு

யாழ் பல்கலைகழகத்தின் எழுச்சி பேரணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும் ஆதரவு

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது எனவும் கோரிக்கைகளை முன் வைத்து யாழ்ப்பாணம் பல்கலைகழக சமூகம் மேற்கொள்ளும் எழுச்சி பேரணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும் தங்களது பூரண ஆதரவினை தெரிவித்துள்ளது.

நாளைய தினம்(16) இடம்பெறவுள்ள யாழ் பல்கலைகழகத்தின் மாபெரும் எழுச்சி பேரணியில் நாமும் கலந்கொள்வதோடு, எமது முழுமையான ஆதரவினையும் வழங்கி நிற்போம், தமிழ் மக்களின் உரிமைகள், நலன்கள் சார்ந்த விடயத்தில் எமது ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கும்.

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் பொறிமுறையாகவும் இருக்க வேண்டும், எனவும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது